முக்கியச் செய்திகள் தமிழகம்

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்பு

தேவர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி பசும்பொன்னில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நாளை
முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 வது குருபூஜை விழா
அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக
அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செய்ய உள்ளனர்.இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமுதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதியில் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இன்றைய தினம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிநவீன ட்ரோன் கேமரா பறக்க விட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து 14 அதிநவீன டிரோன் கேமராக்கள் பறக்கவிட்டு பசும்பொன் கிராமம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்த கண்காணிப்பு முழுவதும் சென்னையில் இருந்தும் பார்த்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கோபுர கண்காணிப்பு அமைக்கப்பட்டு
தொலைநோக்கு கருவி மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் திருஉருவசிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி
ஏந்திய போலீசர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பசும்பொன், கமுதி பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram