வருமான வரித்துறை சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை சோதனை என்பது வழக்கமான நடவடிக்கை தான் எனவும், அவர்களின் சோதனைக்கு தங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அரசியல் கட்சியுடனும் தங்களுக்கு தொடர்பில்லை என விளக்கமளித்துள்ள ஜிஸ்கொயர் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி நிகர வருமானம் இருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : குறுக்கிட்ட மழை…. சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் ரத்து!
சோதனையில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை வருமான வரித்துறையினரிடமே உறுதி செய்து கொள்ளலாம் எனவும் ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த வாரம் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில், 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்ததும், அந்த சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.







