குறுக்கிட்ட மழை…. சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் ரத்து!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில்,  லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அதிகபட்சமாக பதோனி 59 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவினார். 20வது ஓவரில் 2 பந்துகள் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததால், சென்னை – லக்னோ இடையிலான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.