குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு

குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. இன்றும் நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.

இன்றும் நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு சார்பில் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

அண்மைச் செய்தி: ‘மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம்’

இந்த மாநாட்டில், தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அண்மையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என கூறியதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.