சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் தென்சென்னை மாவட்டம் சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து போரூர் சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே தென்சென்னை மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி, கட்டண உயர்வுக்கு எதிரான பதாகைகளைக் கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—-சௌம்யா.மோ






