எனது வீட்டை இடித்துத் தள்ளுங்கள் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தாம் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்…

தாம் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அதேபோல் மேற்கு வங்க மாநில மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் நிர்வாகிகள் மீது பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மொண்டலுக்கு 2020-ல் கால்நடை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அதேபோல் மந்திரியாக இருந்த பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

அண்மைச்செய்தி: சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?

இதனை தொடர்ந்து தற்போது மம்தா பானர்ஜியின் உறவினர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்திருப்பதாகக் கூறி, இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டில் தொடர்ந்து இருக்கிறார்.

 

2011 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வரான பிறகு அவரது உறவினர்கள், சகோதர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். மம்தாவின் சகோதர் சமிர் பானர்ஜியின் மனைவி கஜாரி பானர்ஜி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் பொதுப்பணியாளர் என்பதால் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த மம்தா பானர்ஜி, சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட நிலத்தை நான் வைத்துள்ளதாக ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எனக்கு அதுபற்றி தெரியாது. நாங்கள் ராணி ராஷ்மோனி பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குத்தகைக்கு எடுத்து வீட்டில் வசித்து வருகிறோம். இன்றைய கூட்டத்தில் தலைமை செயலாளரிடம் அந்த இடம் குறித்து விசாரிக்கவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை கொண்டு இடித்து தள்ளுமாறும் உத்தரவிட்டு உள்ளேன் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.