தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டங்களுக்கு உடனடியாக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
காவிரி குண்டார் இணைப்புத் திட்டம், தாமிரபரணி நம்பியார் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கடலில் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்படும்.
சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம் தேவையில்லாதது. சுற்றுச்சூழல் விவசாயத்தை பாதிக்காத வகையில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் கொண்டு வர வேண்டும்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல ஏற்கனவே மூன்று வழிதடங்கள் உள்ள நிலையில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும் தேவையில்லை.
திராவிட மாடல் ஆட்சியில் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எட்டு வழிச் சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு புரியவில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்து விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஆதரிக்கின்றனர்.
சேலம்-மேட்டூர் உபநிதி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.








