பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் மீதே சிபிஐ சோதனை நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காமராஜரைப்போல் தோன்றினால் தான் காமராஜர் ஆட்சி அமையும். முழுக்க முழுக்க பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் மீதே சிபிஐ சோதனை நடக்கிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என கூற முடியாது.
அண்மைச்செய்தி: சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?
தேர்தலில் பின்னடவு வந்துள்ளதை முழுமையாக ஏற்கிறோம். யார் ஆட்சி செய்தாலும் முதல்வர் ஸ்டாலினின் ஒன்றரை ஆண்டுகளின் செயல்பாடுகளைப் பொறுத்த வரை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய முதல்வராக இருக்கிறார்.
மக்கள் எளிதாக அணுகக் கூடிய முதல்வராகச் செயல்படுகிறார் என்றார் கார்த்தி சிதம்பரம்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்த பாஜகவினர் அண்ணாமலையை வரவேற்று கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.