ஜிஎஸ்டி வரிக்குள் டீசல், பெட்ரோல் விலையை கொண்டு வர கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி தமிழ்நாடு முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மௌன மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி தமிழ்நாடு முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மௌன மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையின் படி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜிஎஸ்டி வரிக்குள் டீசல், பெட்ரோல் விலையை கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் சுங்கச்சாவடி தொடர்பான அறிவிப்பு ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை என்று தெரிவித்த அவர், போக்குவரத்து துறையில் லஞ்சம் அதிகரித்துள்ளது. இதில் முதல்வர் தலையீடு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.