டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒன்பது பேர் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வகை கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அதில், தமிழ் டெல்டா பிளஸ் வகை வைரஸ் மதுரை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.







