அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் அளவுக்கு மாபெரும் கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு வித்திட்டது ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவம். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மினியாபொலிஸ் நகர காவல் அதிகாரி டெரிக் சாவின் 22.6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க – அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் கடந்த 2020 -ம் ஆண்டு மே 25-ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் மினியாபொலிஸ் நகர போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஜார்ஜ் பிளாய்ட்யை மடக்கிப்பிடித்தனர். அப்போது காவல் அதிகாரி டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் 10 நிமிடத்திற்கும் மேலாக காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறலால் துடிதுடித்து உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தார் பிளாய்ட்.
இதை அவ்வழியாக சென்ற வாலிபர் ஒருவர் ரெகார்ட் செய்த அந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. உயிருக்கு போராடி துடிதுடித்து மரணித்த ஜார்ஜ் பிலாய்ட்-ன் இந்த வீடியோ உலக மக்கள் அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது. ஊரடங்கை மீறி உலக மக்கள் நிறவெறிக்கு எதிராக நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறை அதிகாரி டெரிக் சவால் உடன் இருந்த மேலும் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ் பிலாய்ட் குடும்பத்தினர் அவர்களின் மேல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. மினசோட்டா நீதிமன்றத்தில் நீதிபதி பீட்டர் காஹில் அரசு தரப்பில் அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ்காரர் டெரிக் சாவின்க்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜார்ஜ் பிலாய்ட் மனைவி மற்றும் மகள் பேசிய வீடியோ திரையிடப்பட்டது அதில் ப்லாய்ட்டின் மகள் “ஐ மிஸ் யூ , ஐ லவ் யூ ” என்று கூறியியருந்தார். இதன் பின் நீதிபதி முன்னிலையில் பேசிய குற்றவாளி டெரிக் சவால் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்காமல் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று மட்டும் கூறியிருந்தார்.
இது குறித்து அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பைடேன் “இது பொருத்தமான தீர்ப்பு” என்று கூறியுள்ளது நிறவெறிக்கு எதிராக போராடிய மக்களின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது.







