டெல்லியில் வரும் திங்கள் முதல் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அங்கு பொது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இப்போது டெல்லியில் கொரோனா தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து மெட்ரோ ரயில் சேவை, பேருந்து சேவை ஆகியவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் வெகுவாக குறைந்து விட்டது. தினசரி தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50-க்கும் கீழாக உள்ளது. இதையடுத்து டெல்லி அரசு ஊரடங்கில் பல்வேறு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் திங்கள் கிழமை முதல் டெல்லியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில், பேருந்துகள் ஆகியவற்றில் 100% பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







