கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை காரணமாக, கபினி, கே.எஸ்.ஆர் அணைகளில் இருந்து காவிரியில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு, 17 ஆயிரம் கன அடி யாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 19-ம் தேதி, 21 ஆயிரத்து 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் தற்போது ஓகேனக்கல் வந்தடைந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.