டெல்லியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வழக்கத்தை விட அதிகமானது என்றும் வானில ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுமார் 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் வெப்ப நிலையில் 40.1 ஆக பதிவாகி உள்ளது. இதுபோன்ற வெப்பநிலை கடந்த 1946 ஆம் ஆண்டில்தான் பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.







