இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் கேரளாவின் வளர்ச்சியை குறைக்கிறது என்று கேரளாவில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து அவர் கேரளாவின் பாலாக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டதிற்கு சென்றடைந்தார்.
கேரளாவின், பாலக்காட்டில் நடக்கும் பேரணியில் பேசிய அவர், “இளம் தலைமுறையினரின் வளர்சிக்கான அரசாக பாஜக இருக்கும். மேலும் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் அதிகப்படியான ஐஐடி மற்றும் ஐடிஐ கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் கேரளாவை வளர்ச்சி பாதையின் வேகத்தை குறைக்கிறது’என்று பேசியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மெட்ரோ மேன் ஸ்ரீதரனை அவர் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகன் சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு புதுச்சேரிக்கு சென்று அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார்.







