நடிகை சாய் பல்லவி மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் ’லவ் ஸ்டோரி’ படத்தில் இடம் பெற்றுள்ள ’சரங்க தரியா’ என்ற பாடல், யூடியூபில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ’சரங்க தரியா’ பாடலை 9 கோடிக்கு அதிகமானோர் பார்த்து ரசித்துள்ள நிலையில், 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இத்திரைப்படத்தை தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் பவன் இசையமைப்பில் மங்கலி பாடியுள்ளார். சுடல அசோக் தேஜா இப்பாடலுக்கு வரிகளை எழுதி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்பாடல் வெளியாகிய சிறுது நாட்களிலே, 9 கோடிக்கு அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.மேலும் சாய்பல்லவியின் அழகிய நடன அசைவுகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மாரி 2 படத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல் பல கோடி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடதக்கது.