நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,222 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,942 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செப்.5ம் தேதி 308ஆக இருந்த உயிரிழப்பு நேற்று 219ஆக உயிரிழப்பு பதிவாகியது. இந்நிலையில் இன்று 290ஆக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
மொத்த பாதிப்பானது 3,30,58,843ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,92,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,22,24,937 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,41,042 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை 69,90,62,776 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்தில் 1.13 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
#Unite2FightCorona#LargestVaccineDrive
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/e3iScU2pV5 pic.twitter.com/7rhOP8l2nt
— Ministry of Health (@MoHFW_INDIA) September 7, 2021
இந்நிலையில் 53,31,89,348 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும், நேற்று மட்டும் 15,26,056 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








