தமிழ்நாட்டில் குறையும் கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 29,976 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில், 30,055 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது…

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 29,976 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில், 30,055 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது சற்று குறைந்துள்ளது. இன்றைய தினத்தில் மட்டும் 1,50,931 பேருக்கு மாநிலம் முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மேற்குறிப்பிட்ட தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 32,24,236 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பாதிப்பில், 17,147 பேர் ஆண்களும், 12,829 பெண்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இன்று 27,507 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 29,73,185 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,359 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை பொறுத்த அளவில், சென்னையில் அதிகப்பட்சமாக 5,973 பேரும் கோவையில் 3,740 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பிலும் சென்னை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.