தமிழ்நாட்டில் டிச. 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் டிச. 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், கடந்த சில  தினங்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

தமிழ்நாட்டில் டிச. 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், கடந்த சில  தினங்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்தது. இந்நிலையில், சில நாட்களாக மழை ஓய்ந்தது. இதையடுத்து  தமிழ்நாட்டில் இன்று முதல்  டிச. 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு தொற்று உறுதி!

இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.