முக்கியச் செய்திகள் விளையாட்டு

4 வது டெஸ்ட்: சாதனை ஷர்துல், 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய வீரர் ஷர்துல் தாகூர் சாதனை படைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட், டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 2) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். கிறிஸ் வோக்சின் பந்தில் ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழக்க, சிறிது நேரத்திலேயே ராகுலும் 17 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த புஜாரா 4 ரன், ஜடேஜா 10, துணை கேப்டன் ரஹானே14 ரன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 9 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் கோலி நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அதன் பிறகு அவரும் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்களுடன் மோசமான நிலைமையில் இருந்தது.

அப்போது வந்த ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி இந்திய அணி, கவுரமான ஸ்கோர் எட்ட வழி வகுத்தார். 31 பந்துகளில் அரைசதம் விளாசிய ஷர்துல், தனது பங்குக்கு 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக் காரர்கள் ரோரி பர்ன்ஸை 5 ரன்களிலும், ஹசீப் ஹமீத்தை ரன் ஏதும் எடுக்காத நிலை யிலும் பும்ரா ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து மூன்று சதம் விளாசிய கேப்டன் ஜோ ரூட், 21 ரன்களில் உமேஷ் யாதவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். இங்கி லாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை யை ஷர்துல் தாகூர் படைத்தார். அதே நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற பெருமையை விராத் கோலி பெற்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடடா.. 4-வது முறையாகத் தள்ளிப் போனது மோகன்லாலின் வரலாற்றுப் படம்!

Halley Karthik

அரசுப் பள்ளி மாணவர்களை ஆடிட்டராக்கும் திட்டம் தொடக்கம்!

Web Editor

மாநில முதலமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

EZHILARASAN D