பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கூட மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. பிரபல பின்னணி பாடாகியாக வலம் வந்த வாணி ஜெயராம் இன்று உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், திரையுலகினர், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.
— Narendra Modi (@narendramodi) February 4, 2023
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக அவரது இல்லத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்கு இருந்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரனிடம் இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பதை குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டறிந்தார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திறமையான வாணி ஜெயராம், பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவு கூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. என பதிவிட்டுள்ளார்.