ஜம்மு காஷ்மீரில் விரிசல் ஏற்பட்டள்ள பகுதிகயில் உள்ள வீடுகளில் இருந்து இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் விரிசலை நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில் கோவில், வீடு, குடியிருப்பு, ஹோட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் திடீர், திடீரென விரிசல் ஏற்பட்டது. இரண்டு ஹோட்டல்கள் லேசாக சரிந்த நிலையில் இருந்தன. இதைதொடர்ந்து நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்நகரில் உள்ள கட்டடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அப்பகுதியில் வசித்த சுமார் 4,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. அங்குள்ள கள நிலவரத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதியான தோடா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் உள்ள கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷீமீரின் தோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி பகுதியில் நிலச்சரிவு காரணமாக 19 வீடுகள் உள்பட 21 கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதில் குடியிருந்தவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் சம்பவ பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டனர். கட்டடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை நேரில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழுவினர் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.