முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தொழில்நுட்பம் Instagram News

இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்குத் தள்ளிய ‘ChatGPT’ – 2 மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்று சாதனை

ChatGPT எனப்படும் பிரபல செயற்கை நுண்ணறிவு செயலி, அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில், 10 கோடி பயனர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிமிலர்வெப் எனும் நுண்ணறிவு தளத்தின் அறிக்கையின்படி, சாட்ஜிபிடி, ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 1.3 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட செயலிகள், 10 கோடி பயனர்களைப் பெற இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்ட நிலையில், சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்றுள்ளது. இதேபோல் கடந்த வாரத்தில் chat.openai.com என்ற இணையதளம், தினசரி 2.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

சாட்ஜிபிடி-ன் வளர்ச்சி, கூகுள் உள்ளிட்ட இணைய ஜாம்பவான்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவின் திறன்கள் பற்றியும், உலகம் அவற்றை பயன்படுத்த காட்டும் ஆர்வம் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். சீனாவின் Baidu என்ற இணையதள நிறுவனமும், தனது சொந்த ChatGPT விரைவில் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

OpenAI சமீபத்தில் ChatGPT-ன் பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின்மூலம், பயனர்கள் அதிக நேரம் அதன் சேவைகளைப் பெற முடியும். மேலும், இந்த பிளஸ் மாடலில் புதிய அம்சங்களை பயன்படுத்துவதற்கான முன்னுரிமையை, பயனர்கள் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘குலு குலு’

Arivazhagan Chinnasamy

இலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

EZHILARASAN D

“தாயன்புக்கு ஈடேது” – ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசு!

Web Editor