முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

பான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30- ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது. கொரோனா காரணமாக பல்வேறு தரப்பட்டவர் களும் கடுமையான பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதால், இணைப்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவ காசம் அடுத்த ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இதைத் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க?’ பிரபல நடிகர் கேள்வி?

Halley karthi

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

Gayathri Venkatesan

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்: ஈஸ்வரன்

Niruban Chakkaaravarthi