மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனக்கு யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் கிடைப் பதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ்
சாலை பணிகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
கூறியதாவது:
கொரோனா காலகட்டத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன். சமையல்காரனாக மாறி வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம்
விரிவுரைகளை வழங்கினேன். அவற்றை யூடியூபில் பதிவேற்றம் செய்தேன்.
வெளிநாட்டுப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான விரிவுரைகள் உட்பட 950-க்கும் அதிகமான விரிவுரைகளை ஆன்லைனில் வழங்கினேன். அவை அதிக பார்வையாளர்களை பெற்று வருவதால் தற்போது யூடியூப் நிறுவனம் எனக்கு ராயல்டியாக மாதம் 4 லட்ச ரூபாய் வழங்கி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.







