எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அவதி!

எடப்பாடியை அடுத்துள்ள நெடுங்குளம் ஊராட்சி வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கோட்டமேடு பரிசல்துறையில் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

எடப்பாடியை அடுத்துள்ள நெடுங்குளம் ஊராட்சி வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கோட்டமேடு பரிசல்துறையில் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம் ஊராட்சி வழியாக செல்லும் காவேரி ஆற்றில் கோட்டைமேடு பரிசல் துறை பகுதியில் தண்ணீர் மிகவும் மாசடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கப்பட்டு வருகிறது.நீரின் மாசுபாடு காரணமாக ஏரியில் உள்ள மீன்களும் செத்து மிதக்கின்றன.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் படித்துறையில் இறங்கி குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் கூட வழியில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். தற்போது விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் கோட்டைமேடு படித்துறை பகுதியில் மட்டும் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் மீனவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.