“சேப்டி ஐலேண்ட்” மூலம் புகார் அளித்த மாலத்தீவு பயணி: சில மணிநேரங்களில் திரும்ப கிடைத்த உடைமைகள்!

பெங்களூருவில் சேப்டி ஐலேண்ட் பாதுகாப்பு சாதன உதவியுடன் புகார் அளித்த மாலத்தீவு புகைப்பட கலைஞக்கு சில மணிநேரங்களில் அவரது உடைமைகள் திரும்ப கிடைத்தன. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷ்ப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மாலத்தீவு கால்பந்து அணி…

பெங்களூருவில் சேப்டி ஐலேண்ட் பாதுகாப்பு சாதன உதவியுடன் புகார் அளித்த மாலத்தீவு புகைப்பட கலைஞக்கு சில மணிநேரங்களில் அவரது உடைமைகள் திரும்ப கிடைத்தன.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷ்ப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மாலத்தீவு கால்பந்து அணி பெங்களூரூ வந்துள்ளது. அந்த அணியின் புகைப்பட கலைஞர் வெளியே சென்று விட்டு தனது அறைக்கு ஆட்டோ ஒன்றில் திரும்பினார்.

ஆட்டோவில் இருந்து இறங்கும்போது தனது கைப்பையை எடுக்க  மறந்துவிட்டார். ஆட்டோவும் அங்கிருந்து புறபட்டு சென்றது. அந்த பையில் பணம், கேமரா மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. என்ன செய்வது என திகைத்த, அவருக்கு சேப்டி ஐலெண்ட் இயந்திரத்தை (Safety islands) பயன்படுத்தி காவல்துறையில் புகார் அளிக்குமாறு சிலர் கூறியுள்ளனர். இது நீல நிறத்தில் உள்ள தொலைபேசி சாவடி போன்ற கட்டமைப்பு ஆகும்.

அதன்படி அவர் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். அடுத்த சில மணிநேரங்களில் கைப்பை கண்டுபிடித்து அவரிடம் பெங்களூரூ அசோக் நகர் போலீசார் ஒப்படைத்தனர். ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில் பெங்களூரூ நகரில் சுமார் 30 பாதுகாப்பு தீவு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை போலீசார் தேர்ந்தெடுத்து இந்த சாதனங்களை நிறுவியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.