கேரளாவில், சொத்துக்காக பெற்ற தாயை விஷம் வைத்து கொலை செய்த மகள் .
கேரள மாநிலம், திருச்சூர் அருகே கீழ்குளம் பகுதியில் வசிக்கும் சந்திரன்- ருக்குமணி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களில் பெற்றோருடன் வசித்து வரும் இந்துலேகாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவருடைய கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே, கணவருக்கு தெரியாமல் 8 லட்சத்திற்கு நகைகளை அடகுவைத்துள்ள இந்துலேகா, கீழ்குளம் பகுதியில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு தங்கள் காலத்திற்கு பிறகு சொத்தை பிரித்து கொள்ளுமாறு தாய் கூறியுள்ளார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிப்பால் தாய் ருக்குமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இந்துலேகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், கூகுள் உதவியுடன் தாய் ருக்குமணிக்கு உணவில் கொஞ்சம் கொஞ்சமாக எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்துலேகாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.







