தமிழக அமைச்சரவை கூட்டத் தேதி மாற்றம்

தமிழக அமைச்சரவை கூட்டம் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலக அமைச்சரவை அரங்கில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி…

தமிழக அமைச்சரவை கூட்டம் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலக அமைச்சரவை அரங்கில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறுகின்றது.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது.

அமைச்சரவை கூட்டத்தில் மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்கள், ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம், புதிய திட்டங்கள், நிறுவன விரிவாக்கங்கள், கொள்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரந்தூர் விமான நிலைய நிலம் கையெடுப்புக்கான அனுமதி வழங்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

முதலமைச்சரின் தகவல் பலகை மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் துறைகள் குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்வதுடன் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் வழங்குவார்.

முதியோர் கொள்கை தொடர்பான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.