நாளை தொடங்குகிறது ஆசிய கோப்பை டி 20 தொடர் – இறுதி பட்டியல் வெளியீடு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் 6 அணிகளின் இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.   ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க உள்ளது.…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் 6 அணிகளின் இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அதனை தொடர்ந்து மறுநாள் நடைபெறும் போட்டியில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 

இந்த நிலையில் இந்த போட்டிகள் A B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங் ஹாங் அணிகளும் மற்றும் B பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்று உள்ளன.

நாளை தொடங்கும் போட்டிகள் அடுத்த மாதம்11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளின் விவரமும் வீரர்களின் விவரமும் வெளியிடபட்டு உள்ளது. இதனிடையே, கடந்த ‘டி-20’ உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து திரும்பியது. இதனால் 28ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முதலில் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் நான்கு அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். கடைசியில் ‘டாப்-2’ இடம் பெறும் அணிகள், செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு முன்னேறும்..

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.