ஆண் வேடமிட்டு மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!

நெல்லை அருகே ஆண் உடை அணிந்து வந்து மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும்…

நெல்லை அருகே ஆண் உடை அணிந்து வந்து மாமியாரை கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமிக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ராமசாமியின் தாய் சீதா ராமலட்சுமிக்கும், மகாலட்சுமிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், ஆத்திரத்தில் இருந்த மகாலட்சுமி, அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியார் சீதா ராமலட்சுமியை ஆண் வேடம் அணிந்து சென்று சரமாரியாக கம்பால் தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டது மகாலட்சுமி என கண்டுபிடித்தனர்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இத்தனை டாட் பால்களா?? பிசிசிஐ-ன் முன்னெடுப்பால் பசுமையாக மாறப்போகும் இந்தியா!!

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதா ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை
வழக்காக மாற்றிய போலீசார், மகாலட்சுமியை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.