அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது.

நியூஸிலாந்த் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 71 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். அதே போல தொடக்க வீரர்களான டெவான் கான்வே 67 பந்துகளில் 56 ரன்களும், ஹென்ரி நிக்கோலஸ் 68 பந்துகளில் 62 ரன்களும் குவித்தனர்.

இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.