மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவேரி ஆற்றின் புனித துலா கட்டத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் கொடுக்கவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. எனவே இந்துக்கள் மாசி மகத்தில் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபடுவார்கள்.
இதையடுத்து மாசிமகத்தையொட்டி இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றின் 16 தீர்த்த கிணறுகள் அமைந்த புனித துலா கட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் வழிபாடு செய்தனர். தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வில் மயிலாடுதுறையை சார்ந்த மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்களும் தர்ப்பணம் கொடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் தர்ப்பணம் செய்த மக்கள் காய்கறிகள், கீரைகள், பச்சரிசி மற்றும் வெல்லம் போன்ற பொருட்களை காவேரி கரையில் உள்ள சிவாலயத்திற்கு தனமான வழங்கினர். தற்போது கோடை காலம் என்பதால் காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், புனித துலா கட்டத்தில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலமாக தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.