குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்க உள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதன்முறையாக நாளை சந்திக்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நாளைய சந்திப்பின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் எழுவர் விடுதலை விவகாரம், நீட் தேர்வு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







