மேகதாது அருகே அணை: நிதி ஒதுக்கிய கர்நாடக அரசு – அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

மேகதாது அருகே அணை கட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசு…

மேகதாது அருகே அணை கட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணை கட்டும் பிரச்னை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மதிக்காமல், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் எந்தவித ஒப்புதலும் பெறாமல், தன்னிச்சையாக மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணி என்ன?

இந்த அறிவிப்பு வரும் கர்நாடக அரசின் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுவதாகவும், தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.