முக்கியச் செய்திகள் குற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கின் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் சரண் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி யுவராஜ் உள்ளிட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி யுவராஜின் ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

அண்மைச் செய்தி: ஒசூர்: ‘ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வரும் குரங்கு’

அதனைத்தொடர்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோகுராஜின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோகுல் ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் பருவ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎஸ்இ மேலாண்மை கூட்டமைப்பு

Arivazhagan Chinnasamy

நெருங்குகிறது ”சித்ரங்” – 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

EZHILARASAN D

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

Halley Karthik