முக்கியச் செய்திகள் தமிழகம்

“சிலிண்டர் விலையுயர்வு மக்கள் தலையில் விழுந்த பேரிடி” – சீமான்

கடந்த ஜூலை மாதம் ரூ.850ஆக சமையல் சிலிண்டரின் விலையானது தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டு 875ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் “சிலிண்டர் விலையுயர்வு மக்களின் தலையில் விழுந்த பேரிடி” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச்சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் விலையை 25 ரூபாய் ஏற்றி, 875 ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்கள் மனங்களில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.”

“ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வரலாறு காணாத வகையிலான விலையேற்றத்தாலும், அதனால் விளைந்த அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையுயர்வாலும் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி, அன்றாடச்செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது திணறித் திண்டாடிக்கொண்டிருக்கையில், இப்போது எரிகாற்று உருளையின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.”

“தவறானப் பொருளாதாரக்கொள்கையினாலும், பிழையான பொருளாதார முடிவுகளாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தைப் புதைகுழிக்குள் தள்ளிவிட்டு, இப்போது அதனை சமப்படுத்த மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றித் துளியளவும் சிந்திக்காது தனிப்பெரு முதலாளிகளின் இலாபவேட்டைக்கு வாசல் திறந்துவிடும் பாஜக அரசின் இச்செயல் கண்டனத்திற்குரியது. மனிதநேயமோ, மக்கள் பற்றோ இல்லாது, அதிகாரம் கொண்டு தன்முனைப்போடு குடிகளை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது!” என்று விமர்சித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வங்கிகள் தனியார்மயம்; திருமாவளவன் எதிர்ப்பு

Halley karthi

கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Halley karthi

“ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்

Jeba Arul Robinson