முக்கியச் செய்திகள் தமிழகம்

வயிற்றைக் கிழத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகள்

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக் கோரி இடுப்புப் பகுதியிலும் கழுத்துப் பகுதியிலும் அறுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 7 இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் கைதிகள் மற்றும் விசாரணை குற்றவாளிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வளாகத்தில் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு என சிறப்பு முகாமும் உள்ளது. இதில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களில் இன்று 7 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரமணன் என்பவர் வயிற்றை கிழித்துக்கொண்ட நிலையில்,மேலும் 5 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தங்களுக்கான தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து சிறையில் வைத்துள்ளதாக அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சிறப்பு முகாமில் தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, “கொடுந்துயருக்கு ஆளான தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த திருச்சி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து பதற்றமும், பெரும் மனவேதனையுமடைந்தேன்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் விஜய் குடும்பத்தையும் விட்டு வைக்காத மோசடிக் கும்பல்!!

Vandhana

கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு: சென்னை மாநகராட்சி

Halley karthi

ஓபிஎஸ் மனைவி மறைவு; நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சசிகலா

Saravana Kumar