டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 5 பேர் காயம்

ராணிப்பேட்டை அருகே டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.  ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58) என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில்…

ராணிப்பேட்டை அருகே டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58)
என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் ஒரு பகுதி டீக்கடையாக
செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பால் காய்ச்சுவதற்காக தனியான சமையலறை
உள்ளது. செல்வராஜ் வழக்கம்போல் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை கடையை திறந்து வியாபாரத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் டீ அருந்துவதற்காக அந்த கடைக்கு வந்து டீ அருந்தி உள்ளனர். டீக்கடை உள்ளே உள்ள மற்றொரு அறை திறந்த செல்வராஜ் மின் விளக்கை ஓளீர செய்ய சுவிட்சை ஆன் செய்து உள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.


இதனால் படுகாயம் அடைந்த செல்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர்
உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு
செல்லப்பட்டனர். இதில் செல்வராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிருக்கு
ஆபத்தான நிலையில் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம்
செய்யப்பட்டனர். மீதமுள்ள மூன்று நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டீக்கடையில் உள்ள தனி அறையில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலிண்டர் வாயு கசிவால் டீக்கடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஐந்து பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.