FIFA உலகக்கோப்பை கால்பந்து – பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5 முறை
சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது குரேஷியா.
கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடரில் நேன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. இந்த காலிறுதியில் பிரேசில் உடனான ஆட்டத்தில் கொடுக்கப்பட்ட 90நிமிடத்தில் இரு
அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட எதிரணி
கோல்கீப்பரை லாவகமாக ஏமாற்றி பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கோல்
அடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விறுவிறுப்பான கூடுதல் நேர ஆட்டத்தில் குரேஷிய வீரர் கோல் அடிக்க ஆட்டம் சமநிலை அடைந்ததுடன், சூடுபிடித்தது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் சமநிலை அடைய, பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் 5முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி குரேஷியா வெற்றி பெற்றது. 5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி, 6வது முறையாக வெல்ல வேண்டும் என்ற நோக்குடன் உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கியது. ஆனால் பிரேசில் வீரர்களின் கனவு நாக் அவுட் சுற்றில் இந்திய அணி எப்படி விளையாடுமோ, அப்படி விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வாக நெய்மர் அவரது தேசிய அணிக்காக விலையாடிய இந்த போட்டியில் தனது 77வது கோலை அடிததார். இதன்மூலம், பிரேசில் அணிக்காக 77கோல்கள் அடித்த ஜாம்பவான் பீலே-வின் சாதனையை சமன் செய்தார் நெய்மர்.