ஒடிசாவில் கரையை கடந்தது ‘அக்வான்’ புயல்!

அக்வான் புயல் கோபால்பூர் அருகே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் கரைகயைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகிலுள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான “அக்வன்” புயல், கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 26 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்திய நேரப்படி காலை 07:30-08:30 மணிக்குள் கோபால்பூர் அருகே (அட்சரேகை 19.1 மற்றும் தீர்க்கரேகை 84.8 அருகில்) வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளைக் கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70-80 கி.மீ. ஆகவும், சில சமயங்களில் 90 கி.மீ. ஆகவும் இருந்தது. இது தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இன்று, நவம்பர் 20, 2026, இந்திய நேரப்படி, இது ஆந்திரப் பிரதேசத்தின் கலிங்கப்பட்டணத்திற்கு வடகிழக்கே சுமார் 120 கி.மீ., ஒடிசாவின் பூரிக்கு மேற்கு-தென்மேற்கே 130 கி.மீ., மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டணத்திற்கு வடகிழக்கே 230 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும்.

இது ஒடிசாவைக் கடந்து ஏறக்குறைய வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 03 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்த 06 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கக்கூடும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.