டவ் தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அடுத்த 24 மணி நேரத்தில் டவ் தே புயல் அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் எனவும், மேலும் வரும் 17ஆம் தேதி, இந்த புயல் மிகவும் வலுப்பெறும். மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில், காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகரும் டவ் தே புயலானது, 18ஆம் தேதி காலை குஜராத் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 16-ஆம் தேதி முதல் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல், மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, கேரளாவில் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும், 16ஆம் தேதி வரை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
. இதையடுத்து, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கேயம், தேவலா, கூடலூர், அவலாஞ்சி, மேல் பவானி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆகிய பகுதிகளிலும் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டி இருக்கும் பிற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கேரளா, மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மாநிலங்களுக்கு, புயல் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுளார். புயல் காரணமாக ஏற்கனவே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டோர்களுக்கும், தேவைப்படுவோருக்கும் உதவி வழங்கும்படி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.