ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் சாலை மறியல்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து கடந்த மாதம் 26-ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம்…

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து கடந்த மாதம் 26-ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் அங்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், இன்று முதல் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ரெம்டெசிவர் மருந்து வாங்க நேரு விளையாட்டு அரங்கத்தில் காத்திருந்த மக்கள்

டோக்கன் அடிப்படையில் தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ரெம்டெசிவர் மருந்து வாங்க, நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர்.

ஆனால், நீண்ட நேரம் காத்துக்கிடப்பவர்களுக்கு டோக்கன் வழங்காமல், புதிதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டி, வரிசையில் நின்றவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.