“ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கிறார்கள்” : ராகுல் காந்தி

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை விடவும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து ராகுல் காந்தி…

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை விடவும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் ஆக்சிஜன் அளவு குறையும் போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி உள்ளார். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான படுக்கைகள் இல்லாமலும்தான் பெரும்பாலான மரணங்கள் ஏற்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்கு முன்பு ராகுல் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவுகளிலும், கொரோனாவால் மட்டும் இந்த சிக்கல் ஏற்படவில்லை என்றும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் இந்த சிக்கல் ஏற்பட்டதாக ராகுல் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ராகுல் காந்தி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால், அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.