முக்கியச் செய்திகள் தமிழகம்

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை வெற்றிபெற மக்கள் இயக்கம்

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை வெற்றிபெற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மக்கள் இயக்கத்தை தொடங்க இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழ்நாடு அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு தடையை கொண்டு வந்த போதிலும் அதனை திறம்பட செயல்படுத்த வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை வெற்றிபெற, மேலும் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்காக மாவட்டந்தோறும் வர்த்தக சங்கங்கள் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் மூலமாக மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடன் பிளாஸ்டிக் தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம்

Halley karthi

சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர் 

Ezhilarasan