சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் சுங்கக் கட்டடம் கட்டப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சுங்க இல்லத்தில் வைகை எனும் புதிய அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், வர்த்தகத்துறையில் நாடு முன்னேற்றமடைய சுங்கத்துறையின் பங்கு மிக முக்கியமானது என தெரிவித்தார். சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் சுங்கக் கட்டடம் பணியாளர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கட்டப்படவுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் முன்யோசனையுடன் இதுபோன்ற அலுவலக கட்டடம் கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறிய அவர், புதிதாக கட்டப்படும் வைகை வளாகம் இனி கட்டப் போகும் கட்டடங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.