நடப்பாண்டில் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, கடந்து வந்த கால்பந்து பயணத்தை தற்போது பார்க்கலாம்.
36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு உலகக்கோப்பையில் காலடி எடுத்து வைத்த அர்ஜென்டினாவின் மமதைக்கு முடிவு கட்டியது கத்துக்குட்டியான சவுதி அரேபியா. அர்ஜென்டினாவின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, அந்த அணி குரூப் சுற்றிலேயே வெளியேறும் என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருந்தது. அந்த கணிப்புகளை பொய்யாக்கிய மெஸ்ஸியின் படை, மெக்சிகோ, போலந்து அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் மீண்டும் மெஸ்ஸியின் மேஜிக்கால் வெற்றி கண்டது அர்ஜென்டினா அணி. காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை சந்தித்தது. தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு குறைவில்லாத இந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்று நெதர்லாந்தை வீழ்த்தியது.
அரையிறுதியில் மெஸ்ஸி, ஆல்வரெஸ் ஆகியோரது அபார ஆட்டத்திற்கு ஈடு கொடுக்காமல் அடி பணிந்தது குரோஷியா அணி. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியுடன் மோதிய அர்ஜென்டினா, பலகட்ட போராட்டத்திற்கு பிறகு உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.