தமிழகம்செய்திகள்

உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு… சிசிடிவியை ஆய்வு செய்ததில் நாடகமாடியது அம்பலம்!

சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாக வாடிக்கையாளர் தகராறு செய்த நிலையில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் உணவில் தலைமுடி இருப்பதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமானது.  

பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் வட மாநில இளைஞர்கள்  சேர்ந்து உணவகம் ஒன்றை
நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த உணவகத்தில் உணவு சாப்பிட வந்த
நபர் ஒருவர் சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் ஆகிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உணவை சாப்பிட்டு முடிக்க இருந்த சிறிது நேரத்தில் உணவக ஊழியரை அழைத்து இந்த உணவில் தலைமுடி இருப்பதாகவும், அதனால் இந்த உணவுக்கு பணம் கொடுக்க மாட்டேன் எனவும் கூறி தகராறு செய்துள்ளார்.   இதனால் உணவக ஊழியர்களும் அவரிடம் பணம் வாங்காமல் அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள்:  புது பொலிவுடன் DD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் சந்தேகம் அடைந்த நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்தனர்.  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த இளைஞரே தன்னுடைய தலையில் இருந்த முடியை பிடிங்கி உணவில் போட்டு,  உணவில் தலைமுடி இருப்பதாக கூறி நாடகம் ஆடியது அம்பலமானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மிக்ஜாம் புயல் – விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு!

Web Editor

அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; தொடங்குகிறது முதல் யாகசாலை பூஜைகள்

G SaravanaKumar

வன்முறையை தூண்டும் திமுக அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை- மத்தியமைச்சர்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading