கடலூரில் நார்வே நாட்டு பெண்ணிற்கும், தமிழ்நாட்டு இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பிஎச்டி பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். சிவானந்தினியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பே நார்வேவில் குடியேறியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த பாலமுருகனுக்கும், சிவானந்தினிக்கும் இடையே காதல் மலர, அதனை தனது குடும்பத்தினரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் பாலமுருகன் – சிவானந்தியின் காதலை ஏற்றுக்கொண்டு, திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : இறையன்புவின் பேனாவால் முதல் கையெழுத்து – புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் சிவ்தாஸ் மீனா!!
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் கடலூர் மஞ்சக் குப்பத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில், இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். நார்வே பெண்ணை கடலூர் இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.







