கடலூர் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, அதன் தாய் சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில் மயானம் செல்லும் பாதையில் மதுரை வீரன் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, பிறந்து அரை மணி நேரமே இருக்கும் பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது. மேலும் தொப்புள் கொடி வெட்டப்பட்ட நிலையில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. பின்னர் இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் வேப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை இங்கே வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்